17 டிசம்பர், 2010

ஜுமுஆ உரை:¤தொழுகையைப் பேணுவோம்¤

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடிஅல்ஹுதா தவ்ஹீத் பள்ளியில் 17.12.2010 வெள்ளிக்கிழமை அன்று மதுரைTNTJ சகோதரர் "சுலைமான்"அவர்கள் "தொழுகையைப் பேணுவோம்" என்ற தலைப்பில் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆத் தொழுகையில் ஏராளமான ஆண்களும் மற்றும் பெண்களும் கலந்து கொண்டனர்.

10 டிசம்பர், 2010

ஜூமுஆ உரை:¤இஸ்லாமும்,தீவிரவாதமும்¤

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி அல்ஹூதா தவ்ஹீத் பள்ளியில் 10.12.10 வெள்ளிக்கிழமையன்று TNTJ சகோதரர்"P.S.A.அப்துல் பாசித்" அவர்கள் "இஸ்லாமும்,தீவிரவாதமும்" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.அதன் பிறகு நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

3 டிசம்பர், 2010

ஜுமுஆ உரை:¤இஸ்லாமிய அழைப்பு பணியும்,நமது நிலைமையும்¤

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹூதா தவ்ஹீத் பள்ளி"யில் 03.12.10 வெள்ளிக்கிழமை அன்று TNTJ சகோதரர் "P.S.A.அப்துல் பாசித்" அவர்கள் ¤இஸ்லாமிய அழைப்புப் பணியும்,நமது நிலைமையும்¤ என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார். ஜுமுஆ உரைக்கு பின் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

TNTJ இளையான்குடி வட்டாரக் கிளை- கலந்தாலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹூதா தவ்ஹீத் பள்ளி"யில் 28.11.10 ஞாயிற்றுக்கிழமை அன்று TNTJ இளையான்குடி வட்டாரக் கிளையின் "மசூரா"(கலந்தாலோசனைக் கூட்டம்) நடை பெற்றது. இக் கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் பல உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இக் கலந்தாலோசனைக் கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பாட்டன.
¤பாபர் மசூதி இடிப்பு வழக்கை உச்சநீதி மன்றமே தானாக முன்வந்து விசாரித்து நீதி வழங்க வலியுறுத்தி இன்ஷா அல்லாஹ் ஜனவரி 4 ல் மதுரையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கான சுவர் விளம்பரம்,பேருந்து ஏற்பாடு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
¤இளையான்குடியில் ஜனவரி 4 ஆர்ப்பாட்டம் குறித்து சொற்பொழிவாற்ற TNTJ நிறுவனர் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களையும்,இஸ்லாம் கூறும் ஒழுக்கவியல் என்ற தலைப்பில் மார்க்க சொற்பொழிவாற்ற சகோதரர் "K.S.அப்துல் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்களையும் அழைப்பது என்றும் அதற்கான செலவுகளை சிவகங்கை TNTJ மாவட்டமே ஏற்பாடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
¤TNTJ இளையான்குடி கிளை சார்பாக காலண்டர் தயாரிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
¤கூட்டுக் குர்பானி வரவு-செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டு பள்ளிவாசலின் தகவல் பலகையில் ஒட்டப்பட்டது.

2 டிசம்பர், 2010

ஜுமுஆ உரை:*துல்ஹஜ் பிறை*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹூதா தவ்ஹீத் பள்ளி"யில் 26.11.10 வெள்ளிக்கிழமை அன்று TNTJ சகோதரர் "அப்துல் பாசித்" அவர்கள் ¤துல்ஹஜ் பிறை ¤ என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார். ஜுமுஆ உரைக்கு பின் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

ஜுமுஆ உரை:இஸ்லாத்தின் தனிச் சிறப்புகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹூதா தவ்ஹீத் பள்ளி"யில் 19.11.10 வெள்ளிக்கிழமை அன்று TNTJ சகோதரர் "கலீல்" அவர்கள் ¤இஸ்லாத்தின் தனிச் சிறப்புகள்¤ என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார். ஜுமுஆ உரைக்கு பின் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி வட்டாரக் கிளை சார்பாக "தியாகத் திருநாள் திடல் தொழுகை" 18.11.2010 வியாழக்கிழமையன்று இளையான்குடி சம்சு தெரு அருகில் உள்ள "அப்துல் கலாம் நகர்" திடலில் நடை பெற்றது. இதில் TNTJ சேலம் மாணவர் ரபீக் அவர்கள் தொழுகை நடத்தி சிறப்புரையாற்றினார்.இத் திடல் தொழுகையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

28 நவம்பர், 2010

ஜுமுஆ உரை:மறுமை சிந்தனை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இளையான்குடி "அல்ஹூதா தவ்ஹீத் பள்ளி"யில் 12.11.10 வெள்ளிக்கிழமை அன்று TNTJ சிவகங்கை மாவட்டப் பேச்சாளர்A.K.சீனி முகம்மது அவர்கள்"மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.இத் தொழுகையில் 40 ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

22 ஜூன், 2010

ஜூமுஆ உரை:இந்திய வரலாற்றில் முஸ்லிம்கள் பங்கு.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி அல்ஹூதா தவ்ஹீத் பள்ளியில் 18.06.10 வெள்ளிக்கிழமையன்று TNTJ சிவகங்கை மாவட்டப் பேச்சாளர் அஹமது ஷா அவர்கள் "இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் பங்கு" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.அதன் பிறகு நடைபெற்ற தொழுகையில் 55க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

11 ஜூன், 2010

ஜுலை 4 செயல் வீரர்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹூதா தவ்ஹீத் பள்ளி"யில் 11.06.10 வெள்ளிக்கிழமையன்று இன்ஷா அல்லாஹ் ஜுலை 4ல் நடை பெறவுள்ள "ஒடுக்கப்பட்டோர் உரிமை மாநாடு" சம்பந்தமான செயல் வீரர்கள் கூட்டம் ஜுமுஆத் தொழுகைக்குப் பின் TNTJ சிவகங்கை மாவட்டத் தலைவர் A.K.சீனி முகம்மது தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஜுலை 4 மாநாட்டிற்கு மக்களை அலை கடலென திரளாகப் பங்கு பெறச் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக் கூட்டத்தில் கிளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஜூமுஆ உரை: பிரார்த்தனையின் ஒழுங்குகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹூதா தவ்ஹீத் பள்ளி"யில் 11.06.10 வெள்ளிக்கிழமையன்று TNTJ சிவகங்கை மாவட்டத் தலைவர் சகோதரர் A.K.சீனி முஹம்மது அவர்கள் "பிரார்த்தனையின் ஒழுங்குகள்"என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.அதன் பின்னர் நடைபெற்ற தொழுகையில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களும் கலந்து கொண்டனர்.

ஜூமுஆ உரை: இஸ்லாமும்,கல்வியும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹூதா தவ்ஹீத் பள்ளி"யில் 04.06.10 வெள்ளிக்கிழமையன்று TNTJ சிவகங்கை மாவட்டப் பேச்சாளர் சகோதரர் அஹமதுஷா அவர்கள் "இஸ்லாமும்,கல்வியும்" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.அதன் பின்னர் நடைபெற்ற தொழுகையில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களும் கலந்து கொண்டனர்.

28 மே, 2010

ஜுமுஆ உரை:ஐவேளைத் தொழுகையும், நமது நிலையும்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹுதா தவ்ஹீத் பள்ளி"யில் 28.05.10 வெள்ளிக்கிழமை அன்று காரைக்குடி TNTJ சகோதரர் உமர் பாருக் அவர்கள் "ஐவேளைத் தொழுகையும், நமது நிலையும்" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.ஜுமுஆ உரைக்குப் பின்னர் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

ஜுமுஆ உரை:திருக்குர்ஆனின் சிறப்புகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி அல்ஹூதா தவ்ஹீத் பள்ளியில் 21.05.2010 வெள்ளிக்கிழமை அன்று TNTJ சிவகங்கை மாவட்டத் தலைவர் A.K.சீனி முஹம்மது அவர்கள் "திருக்குர்ஆனின் சிறப்புகள்" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.ஜுமுஆ உரைக்குப் பின்னர் நடைபெற்ற தொழுகையில் 50 ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

கீழாயூரில் மார்க்க விளக்கத் தெரு முனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி வட்டாரக் கிளை சார்பாக கீழாயூரில் மார்க்க விளக்கத் தெரு முனைக் கூட்டம் மஹ்ரிப் தொழுகைக்குப் பின் நடை பெற்றது.இக் கூட்டத்தில் TNTJ சிவகங்கை மாவட்டப் பேச்சாளர் அஹமது ஷா அவர்கள் "நன்மையை ஏவி தீமையைத் தடுங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

20 மே, 2010

தவ்ஹீத் மாப்பிள்ளை

தவ்ஹீதின் இளைய சமுதாயமே! நீங்கள் தொழுகையில் விரலை அசைப்பதையும்,தொப்பி அணியாமல் தொழுவதையும்,தாடி வளர்ப்பதையும்,கரண்டைக் காலுக்கு மேல் கைலி கட்டுவதையும்,சமாதி வழிபாட்டை எதிர்ப்பதையும் மட்டும்தான் ஏகத்துவக் கொள்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?
இதை மட்டும் நீங்கள் கடைபிடித்து மாற்றுக் கொள்கை உடையவர்களிடம் தவ்ஹீத் கொள்கையை நிலை நாட்டப் போராடினால் நீங்கள் தவ்ஹீதுவாதிகள் ஆகி விடுவீர்களா? இது மட்டும்தான் தவ்ஹீத் கொள்கையா? உங்களிடம் தவ்ஹீதில் உறுதியான கொள்கைப் பிடிப்பு இருக்கிறதா? என்பதை மக்கள் எப்படிக் கணிக்கிறார்கள் தெரியுமா?
உங்கள் வாழ்நாளில் வரும் பல விஷயங்களைக் கவனித்து அதில் இவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே தவ்ஹீதின் கொள்கைப் பிடிப்பின் அளவைக் கணக்கிடுகிறார்கள்.அதிலும் குறிப்பாக ஏகத்துவவாதிகளின் கொள்கைப் பிடிப்பை அளவிடுகிறார்கள்.ஏகத்துவத்தின் பிடிப்பு எப்படி இருக்கிறது என்பதை அவர்களின் திருமணம் என்ற நிகழ்ச்சி அழகாகப் படம் பிடித்துக் காட்டி விடுகிறது.
திருமணத்தில் திருக்குர்ஆன் நபி வழியின்படி நடக்கிறார்களா? இல்லை பேருக்குத் திருமணத்தை நடத்துகிறார்களா? என்பதை மக்கள் பார்க்கிறார்கள்.அவர்களின் பார்வையில் பெரும்பாலான தவ்ஹீத்வாதிகளின் திருமணம் பெயருக்கு இஸ்லாமியத் திருமணமாகக் காட்சி தருகின்றது.
ஆம்! இன்று தவ்ஹீத்வாதிகள் என்று கூறுபவர்களின் திருமணமும், அதன் பிண்ணனியும் அவர்களின் கொள்கைப் பிடிப்பைத் தெளிவாக அடையாளம் காட்டத்தான் செய்கிறது.
"பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளைக் கட்டாயமாகக் கொடுத்துவிடுங்கள்!அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மன நிறைவுடனும், மகிழ்வுடனும் உண்ணுங்கள்! அல்குர்ஆன்:4:4 இந்த வசனத்தின் அடிப்படையில் தவ்ஹீத்வாதிகள் சில ரூபாய்களை அல்லது சிறிதளவு தங்கத்தை மஹராகக் கொடுத்து ஒரு பயான் ஒன்றையும் வைத்து விட்டு நாங்கள் நபி வழித் திருமணம் செய்துவிட்டோம் என்று கூறிக் கொள்கிறார்கள்.ஆனால் முழுமையாக நபி வழியைப் பின்பற்றி திருமணம் செய்யவில்லை.
"நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.
1.அவளது செல்வத்திற்காக 2.அவளது குடும்ப பாரம்பரியத்திற்காக
3.அவளது அழகிற்காக
4.அவளது மார்க்கத்திற்காக
ஆகவே, மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஹுரைரா(ரலி).நூல்:புகாரி:5090

14 மே, 2010

ஜுமுஆ உரை:அல்குர்ஆனின் சிறப்புகளும், அத்தாட்சிகளும்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி வட்டாரக் கிளை "அல்ஹுதா தவ்ஹீத் பள்ளி"யில் 14.05.2010 வெள்ளிக்கிழமை அன்று திருப்பத்தூர் தவ்ஹீத் சகோதரர்"ஜஹாங்கிர்"அவர்கள் "அல்குர்ஆனின் சிறப்புக்களும்,அத்தாட்சிகளும்" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.இதற்குப் பிறகு நடை பெற்ற ஜுமுஆத் தொழுகையில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

7 மே, 2010

ஜுமுஆ உரை:இஸ்லாமிய இயக்கங்கள் ஓர் பார்வை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி வட்டாரக் கிளை"அல்ஹுதா தவ்ஹீத் பள்ளி"யில் 07.05.2010 வெள்ளிக்கிழமை அன்று TNTJ சிவகங்கை மாவட்டப் பேச்சாளர் சகோதரர் "அஹமது ஷா"அவர்கள் "இஸ்லாமிய இயக்கங்கள்-ஒரு பார்வை" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.ஜுமுஆ உரைக்குப் பின்னர் நடை பெற்ற தொழுகையில் 50 ஆண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

5 மே, 2010

ஜுமுஆ உரை:இணை வைத்தல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி வட்டாரக்கிளை "அல்ஹுதா தவ்ஹீத் பள்ளி"யில் 30.04.2010 வெள்ளிக்கிழமை அன்று சேலம் TNTJ மதரஸா மாணவர் "மன்சூர்"அவர்கள் "இணை வைத்தல்"என்ற தலைப்பில் "ஜுமுஆ உரை"ஆற்றினார்.அதற்கு பின்பு நடை பெற்ற தொழுகையில் 45 ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

24 ஏப்ரல், 2010

ஜுமுஆ உரை:ஈமானின் கிளைகள்

TNTJ இளையான்குடி "அல்ஹுதா தவ்ஹீத் பள்ளி"யில் சகோதரர் அப்துல் பாசித் அவர்கள் "ஈமானின் கிளைகள்" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார். ஜுமுஆ உரைக்குப் பின் நடைபெற்ற தொழுகையில் 45க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

18 ஏப்ரல், 2010

மார்க்க விளக்கத் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி வட்டாரக்கிளை சார்பாக 17.04.2010 சனிக்கிழமை அன்று இளையான்குடி பஜார் "சன்சன் பேக்கரி எதிரில் "மார்க்க விளக்கத் தெருமுனைக் கூட்டம்"மஹ்ரிப் தொழுகைக்குப் பின் மாலை 6.55 மணிஅளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் TNTJ சிவகங்கை மாவட்டப் பேச்சாளர் சகோதரர் அகமதுஷா அவர்கள் "இன்றைய நிகழ்வுகளும்,அதற்கு இஸ்லாம் கூறும் தீர்வுகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.ஏராளமான மாற்றுமத சகோதரர்களும்,இஸ்லாமிய சகோதரர்களும், இச்சொற்பொழிவைக் கேட்டு பயன் பெற்றனர்.

17 ஏப்ரல், 2010

ஜுமுஆ உரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹுதா தவ்ஹீத் பள்ளி"யில் 16.04.2010 வெள்ளிக்கிழமை அன்று TNTJ சிவகங்கை மாவட்டப் பேச்சாளர் சகோதரர் அஹமதுஷா அவர்கள் "உண்மையான ஏகத்துவ வாதிகள் யார்?" என்ற தலைப்பில் "ஜுமுஆ உரை"ஆற்றினார்.இத் தொழுகையில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

10 ஏப்ரல், 2010

ஜுமுஆ உரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹுதா தவ்ஹீத் பள்ளி"யில் 09.04.2010 வெள்ளிக்கிழமை அன்று P.S.A.அப்துல் பாசித் "நம்பிக்கை கொண்டோர்" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.அதன் பிறகு நடை பெற்ற ஜுமுஆத் தொழுகையில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

9 ஏப்ரல், 2010

ஜுமுஆ உரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி "அல்ஹுதா தவ்ஹீத் பள்ளி"யில் 02.04.2010 வெள்ளிக்கிழமை அன்று சகோதரர் P.S.A.அப்துல் பாசித் அவர்கள் கடந்த வாரம் உரையாற்றிய "நம்பிக்கை கொண்டோரும்,தொழுகையும்" என்ற தலைப்பின் தொடர்ச்சியாக ஜுமுஆ உரையாற்றினார்.ஜுமுஆத் தொழுகையில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

4 ஏப்ரல், 2010

ஜுமுஆ உரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இளையான்குடி "அல்ஹூதா தவ்ஹீத் பள்ளியில் 26.03.2010 வெள்ளிக்கிழமை அன்று சகோதரர் P.S.A.அப்துல் பாசித் "நம்பிக்கை கொண்டோரும்,தொழுகையும்" என்ற தலைப்பில் ஜுமுஆ உரையாற்றினார்.இத் தொழுகையில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

21 மார்ச், 2010

மாற்று மத சகோதரிகள் இருவருக்கு திருக்குர்ஆன் வழங்குதல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி வட்டாரக் கிளை சார்பாக கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த மகளிர் காவலர் ஒருவருக்கும், கன்னியாஸ்திரி ஒருவருக்கும் சகோதரர் PJ அவர்கள் மொழி பெயர்த்த "திருக்குர்ஆன்" தமிழாக்கம் 21.03.2010 அன்று வழங்கப்பட்டது.

வாழ்வாதர உதவித் தொகை வழங்குதல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி வட்டாரக் கிளை சார்பாக ஏழைப் பெண்கள் இருவருக்கு தலா ரூ600/வீதம் ரூ1200/வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.

20 மார்ச், 2010

மார்க்க விளக்கத் தெருமுனைக் கூட்டம்

20.03.2010 சனிக்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி வட்டாரக் கிளை சார்பாக சாலையூர் சென்ட்ரல் கிளாத் ஸ்டோர் எதிரில் மார்க்க விளக்கத் தெரு முனைக் கூட்டம் மாலை 6.55 மணி அளவில் நடை பெற்றது. இக் கூட்டத்தில் "மனித குலத்தைச் சீரழிக்கும் விபச்சாரமும் அதற்கு இஸ்லாம் கூறும் தீர்வும்" என்ற தலைப்பில் TNTJ சிவகங்கை மாவட்டப் பேச்சாளர் சகோதரர் அஹமது ஷா அவர்கள் உரையாற்றினார்கள்.இக் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

19 மார்ச், 2010

ஜுமுஆ உரை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடிஅல்ஹுதா தவ்ஹீத் பள்ளியில் 19.03.2010 வெள்ளிக்கிழமை TNTJ அதிராமபட்டிணம் மாணவர் முஹம்மது அஸ்லம் அவர்கள் "அர்ஷின் நிழலில் ஏழு பேர்" என்ற தலைப்பில் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆத் தொழுகையில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்களும் மற்றும் பெண்களும் கலந்து கொண்டனர்.